தாங்க முடியாத வலி


அன்பு நண்பர்களுக்கு
என் இனிய வணக்கம்
 இது எனது அனுபவம்
என் வாழ்கையில் எத்தனையோ 
அடிபட்டுள்ளது
கை உடைந்துள்ளது ,


கால் எலும்பு முறிந்துள்ளது
தலையில் பல அடி பட்டு தையல் போட்டுள்ளேன்
ஏன் ஒரு தடவை என் அண்ணன் அடித்து கண்ணில் ரத்தம்
வந்துள்ளது- தையலும் போட்டுள்ளேன் ..

இந்த வலியெல்லாம் தாங்க முடிந்த என்னால்
ஒரு சிறு
கல்லின்  வலியை தாங்கமுடியவில்லை



ஆம் !
என் வயிற்றில் பயங்கர வலி
சூட்டால் ஏற்பட்ட வலி என்று நினைத்தேன்
பின்பு வலி உச்சத்துக்கு போய்விட்டது
என் வாழ்வில் அனுபவிக்காத வலி !
செத்து பிழைத்தேன் ...
வயிற்று வலியும் தலை வலியும் தனக்கு
வந்தால்தான் தெரியும் என்பார்கள் ..

அதை உணர்ந்தேன் ....
வாந்தி எடுத்தேன், லூஸ் மோஷன் ,
தாங்க முடியாத வயிறு வலி ,
என்னை மறந்தேன் வலியால் துடித்தேன்
உட்கார முடியவில்லை ,
நிற்க முடியவில்லை ..
படுக்கவும் முடியவில்லை
இப்படியும் அப்படியும் உருண்டேன் ..

பிறகு மருத்துவ மனைக்கு சென்றேன் ..
ஸ்கேன் எடுக்க சொன்னார்கள் ..
வயிற்றில் கல் இருக்கிறதாம்
தற்போதைக்கு வலி குறைய ஊசி போட்டார்கள்
குளுகோஸ் ஏற்றினார்கள் ..
வலியில் துடித்து கொண்டிருந்த நான்
மெல்ல என்னை மறந்து அம்மா அம்மா என்று
கத்தியபடியே உறங்கி விட்டேன் ..

பெண்களின் சுமையும் , தாய்மையின் பெருமையும்
அன்று முழுமையாய் உணர்ந்தேன் ..

சத்தியமா சொல்கிறேன் !
 யாருக்கும் இந்த வலி வரகூடாது

டாக்டரிடம் ஏன் இந்த கல் உருவானது என்று கேட்டேன்
அதற்க்கு அவர் சொன்ன பதில்

தண்ணீர் குறைந்த அளவில்
குடித்ததே இதற்க்கு காரணம் என்றார் .

அதுமட்டுமல்ல மேலும் எப்படி உருவானது என்பதை
அவர் சொன்னார்
கொழுப்பு நிறந்த கறி அதிகம் சாப்பிடும் போது ,
தண்ணீர் அளவு குறையும் போது ..
மது குடிக்கும் போது ,
தக்காளி விதை அதிகம் சேரும் போது ,

சுத்தமில்லா  உணவை அருந்தும் போது - அதாவது fastfood 
போன்ற உணவகத்தில்  அருந்தும் போது ....

இது போன்ற காரணகளால் கல் உருவாகுமாம் !

குறைந்த அளவு அசைவத்தை எடுத்து கொள்ளுங்கள்
டைம் க்கு சாப்பிடுங்க ..
தண்ணீர் நல்ல குடிங்க ...
மதுவை குறையுங்கள் .. சந்தோசமா இருங்கா ..

எனது கருத்து :
இந்த அனுபவத்தை அளிப்பதன் காரணம்
வரும் முன் காப்போம் ........




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts