Queensland சென்றிந்தேன் Chennai Queensland சென்றிருந்தேன்.



 பல நாட்களாகவே செல்ல வேண்டும் என்று மனதில் ஒரு ஆசை. 
அது என்னவோ செல்லமுடியாமல் நாட்கள் மட்டும் சென்று விடுகிறது..
ஒரு வழியாக 17 -06 -2012 அன்று சென்று விட்டேன்.. 
10 பேர் செல்வதாக இருந்தது .. 
ஆனால் சென்றது என்னவோ 4 பேர் மட்டுமே ! 

பைக்கில் செல்வதா அல்லது பஸில் செல்வதா என்று ஒரு குழப்பம் .. 
கடைசியில் பஸில் ஏறினோம். 
மணி காலை 8am இருக்கும். 
ஏறும்போது கண்டக்டரிடம் கேட்டோம் Queensland இல் பஸ் நிற்குமா?என்று! 
அவர் நிற்காது என்று சொல்லிவிட்டார். 
பரவாயில்லை Queensland வரும்போது பார்த்துக்கலாம் என்று விட்டு விட்டோம். 
மணி 10 :10 am இருக்கும்! 
Queenland வந்துவிட்டது.. 
அனைவரும் எழுந்து கண்டக்டரிடம் பஸ்ஸை நிற்க சொல்லி கேட்டோம். 
அவரும் சீக்கிரம் டிரைவரிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள் என்று சொன்னார். 
அதான் ஒரு பழமொழி இருக்கே ! 
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டார் என்று. 
அந்த பன்னாட நாயி வண்டியை நிறுத்தமாட்டேன் என்று சொல்லிவிட்டான் . 
டிரைவரிடம் ,: கண்டக்டர்தான் சொன்னார் என்று சொன்னேன். 
அதற்க்கு அவன் வீசில் ஊத சொல்லு நான் வண்டியை நிறுத்துகிறேன் என்று சொன்னான் . 
அந்த பாழாபோன ஓட்டுனர். 
ஒரு வழியாக கரெக்டா Queensland வாசலில் இறங்கிறோம். 
"ஒரு பக்கம் பசி 
ஒரு பக்கம் 
டைம் க்கு வந்துவிட்டோம் என ஒரு சந்தோஷம்" 
உள்ளே சென்றால் "Oh god " கடல் போல கூட்டம் . 
எப்படி டிக்கெட் வாங்குவது என்று புரியவில்லை . 
டிக்கெட் வாங்கவே ஒரு மணி நேரம் ஆகும் போல ... 
நல்லதுக்குதான் ஒரு வழி. 
கேட்டதுக்கு பல வழி இருக்கே ! 
டிக்கெட் வாங்கும் அருகில் இருவரிடம் பேச்சி கொடுத்து அவரிடம் டிக்கெட் வாங்க சொல்லி விட்டோம் . 
10 நிமிடத்தில் வேலை முடிந்தது.. 
உள்ளே சென்றோம் 
உள்ளே எடுத்த முதல் புகை படம் இதுதான் . 
இதோ மிக உயரமாக தெரிகிறதே ! 
இதன் அங்கு இருக்கும் முதல் Rides .

அந்த rides இல் அவ்வளவு கூட்டமாக இருந்ததால் பிறகு பார்த்துக்கலாம் என்று அடுத்த rides க்கு ஏறலாம் என்று முன் நோக்கி நகர்ந்தோம். 
இங்கு மொத்தம் 51 rides இருக்கு அதில் நாங்க ஏறிய மிக்கியமானவற்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன் . 
இந்த 51 rides இல் நாங்கள் அதிகபட்சமாக 20இல் தான் ஏறி இருப்போம் என்பது குறிப்பிடத்தக்கது . 
Alpen Blitz இந்த rides தான் நாங்கள் முதலில் ஏறினோம் . 
இரயில் வண்டி வேகமாக வளைந்து வளைந்து சென்றால் எப்படி இருக்கும் ! 
ஆம் நண்பர்களே அப்படிதான் இருந்தது 
அருமையாக இருந்தது. 
கண்டிப்பா போங்க .. 



Mins Drive rides - Rollar Coaster  -இந்த ஒன்றுக்குத்தான் நாங்கள் அதிக நேரம் காத்திருந்து சென்றோம் . 
சென்றதில் பலன் கிடைத்தது. 
நான் சென்றவற்றிலேயே எனக்கு ஒரு சிறு பயத்தோடு என்ஜாய் பண்ணது ! இதில் தான். 
உண்மையில் அவ்வளவு அருமை !! 
மிஸ் பண்ணாமல் இதில் போங்க .. 
சூப்பர்ங்கோ!! 
அந்த கார் முதலில் கிழிருந்து மெதுவாக மேலே சென்று பிறகு மேலிருந்து கிழே வேகமாக வரும்போது.. 
நெஞ்சில இருந்து ....... வரைக்கும் 
நான் அதை சொல்ல மாட்டேன் அதுவரைக்கும் நரம்பெல்லாம் சிலிர்க்குதுக்கோ !!
கிழே உள்ள வீடியோவை பாருங்க 

Queensland -இல் இந்த Rides ரொம்ப முக்கியமானது.. 
-CENTROX- அப்படி என்ன Special என்று கேட்கிறிங்களா? 
ஆமாங்க .. 
உலகத்தில் இந்த Rides மொத்தம் மூன்று இடத்தில்தான் இருக்கிறது.
கிழே உள்ள படத்தை கிளிக் பண்ணி பாருங்க தெரியும் 
இந்த Rides -இல் ஏறும் போது Pepsi ஒரு கப் தராங்க .
குடிச்சிட்டு rides -ல உட்கரனுமாம் .
Rides சுழலும் போது குடித்த பெப்சி வயிற்றில் சுழலுவது தெரியுமாம்.
கிழே உள்ள வீடியோவை பாருங்க
பார்க்க பெரிசா தெரியலைனாலும் ..
உண்மையில் சூப்பர் RIDES
அன்பு நண்பர்களே 
Already நான் மொக்க போட்டேன்னு நினைக்கிறேன் ..
இதோட முடித்துகொள்கிறேன்.
நான் ரொம்ப Happy யா இருந்தேன்.
போகாதவங்க கண்டிப்பா போங்க ..
அடுத்த பதிவில் Queensland தொடர்ச்சி தொடரும் .....

கருத்து :
வாழ்க்கை வாழ்வதற்கே :
 




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts